மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் பாகிஸ்தான் சென்ற இந்திய கபடி அணி
உலகக்கோப்பை கபடி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் பாகிஸ்தான் சென்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உலகக்கோப்பை கபடி போட்டியை முதன்முதலாக பாகிஸ்தான் நடத்துகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. ஆனால், பாகிஸ்தான் செல்வது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் இருந்து எந்தவொரு முன் அனுமதியும் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச போட்டிகளில் நாட்டின் சார்பாக பங்கேற்கும்போது விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி அவசியம் என்று இருக்கும் நிலையில், இரண்டு அமைச்சகங்களும் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments