ரயில்வே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவத்தினர்

0 674

சென்னையில், ரயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு பாதுகாப்பு பணியில் உதவும் விதமாக முன்னாள் ராணுவத்தினரை ரயில்வே நிர்வாகம் பணியமர்த்தியுள்ளது.

ரயில் நிலையங்களில் ஏற்கெனவே ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், குற்றச் சம்பவங்களை தடுத்து பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. அந்த வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக கடற்கரையிலிருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள சேப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் முன்னாள் ராணுவத்தினர் 22 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 ஷிப்ட்களில் இவர்கள் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments