சொகுசுக்கப்பலில் சிக்கிய இந்தியர்கள், தங்களை காப்பாற்றுமாறு பிரதமருக்கு அபயக்குரல்

0 1002

கொரானா தொற்று பாதித்த சொகுசு கப்பலில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு, இந்திய பணியாளர்கள் பிரதமர் மோடியிடம் அபயக்குரல் எழுப்பி உள்ளனர். 

கடந்த 20 ஆம் தேதி ஜப்பானின் யோகோஹாமா (Yokohama) துறைமுகத்தில் இருந்து  3 ஆயிரத்து 700 பயணிகளுடன் புறப்பட்ட டயமண்ட் எக்ஸ்பிரஸ் (Diamond Express) என்ற கப்பலில் 160  இந்திய பணியாளர்களில் உள்ளனர்.

இதில் பயணித்து, ஜனவரி 25 ஆம் தேதி ஹாங்காங்கில் இறங்கிய ஒரு பயணிக்கு கொரானா தொற்று இருப்பதாக கடந்த 2 ஆம் தேதி தகவல் வெளியானது. இதை அடுத்து மீண்டும்  யோகாஹாமாவுக்கு கொண்டு வரப்பட்ட கப்பல்,கடந்த 5 ஆம் தேதி முதல் அங்கு தனியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதில் நடத்தப்பட்ட  சோதனையில்  130 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், கப்பலில் சமையல் நிபுணராக இருக்கும் பினய் குமார் சர்கார் (Binay Kumar Sarkar) என்பவர்  அபயக்குரல் எழுப்பி பிரதமர் மோடிக்கும், ஐ.நா.வுக்கும் வீடியோ செய்தியை சமூக வலைதளத்தில் அனுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments