வேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக, மத்திய அரசு இன்னும் இரண்டு மூன்று நாளில் முடிவு எடுத்து அறிவிக்க உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதத்தை, டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து அளித்த அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும், அவருக்கு தமிழ்நாட்டில் நல்லது நடந்தால் பிடிக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சாடினார்.
Comments