ஒருதலைக் காதலால் தீவைத்து எரிக்கப்பட்ட பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0 681

மகாராஷ்டிராவில் ஒருதலைக் காதலால் தீவைத்து எரிக்கப்பட்ட பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த வாரம் திங்கட்கிழமை வழக்கம் போல் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தவரை, பின் தொடர்ந்த விகேஷ் நாக்ராலே என்பவன் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தப்பிச் சென்றான். பலத்த காயமுற்ற விரிவுரையாளரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அடுத்த சில மணி நேரத்திலேயே விகேஷ் நாக்ராலேவை கைது செய்து விசாரித்ததில், ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையான அவன் ஒரு தலை காதல் காரணமாக தீ வைத்து கொளுத்தியதாக தெரிவித்தான். இதனிடையே 40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் விரிவுரையாளர் காலை 6:55 மணியளவில் உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments