கடந்த மாதம் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 6 சதவிகிதம் வீழ்ச்சி - இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம்
விலை உயர்வு, பொருளாதார வளர்ச்சி சரிவு உள்ளிட்ட காரணங்களால், கடந்த மாத உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 6 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்து விட்டதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2019 ஜனவரியில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 91 ஆக இருந்த வாகன விற்பனை இந்த ஆண்டு ஜனவரியில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 714 ஆக குறைந்துள்ளது. கார்களைப் பொறுத்தவரை எட்டு புள்ளி ஒரு சதவிகித வீழ்ச்சியுடன் கடந்த மாதம் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 793 என்ற எண்ணிக்கையாக குறைந்துள்ளது.
பிஎஸ் நான்கு தரத்தில் இருந்து, வரும் ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ் 6 தரமாக வாகனங்களை உயர்த்துவதால் எற்படும் செலவினத்தை அடுத்து கார் விலையும் உயர்ந்துள்ளது. அதே போன்று அனைத்து ரக இருசக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த மாதம் 15 புள்ளி 17 சதவிகிதம் குறைந்துள்ளது.
அதே சமயம் மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி சாலை கட்டமைப்பு மற்றும் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட்டால் வாகன விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Comments