உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் மோதல்..கைகலப்பு..!!

0 2377

இந்தியா வங்கதேசம் இடையிலான ஜூனியர் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின் போது இரு அணிகளிடையே மோதல் உருவானது.

 ஜுனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 177 ரன்களை எடுத்தது. 178 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய வங்கதேச அணி "டக்வொர்த் லூயிஸ்" முறையில் வெற்றி பெற்று முதல் முறையாக ஜூனியர் உலகக்கோப்பையை வென்றது.

 

வெற்றிக்கான கடைசி ரன்னை அடித்ததும் பவுண்டரியில் நின்று கொண்டு இருந்த மொத்த வங்கதேச அணியும் மைதானத்திற்குள் வந்து வெற்றியை கொண்டாடினர். அப்போது வெற்றி பெற்ற வங்கதேச அணியினர் இந்திய அணியினரின் அருகே வந்து அவர்களை வெறுப்பேற்றும் விதாமாக நடந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து அதே செயலில் ஈடுபட்ட வங்கதேச அணியினரின் செயலை கண்டு இந்திய அணியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது, கடைசியில் இரு அணிகளும் கைகலப்பு செய்யும் அளவிற்கு ஆக்ரோஷமானார்கள். இதைக்கண்டு அங்கு இருந்த நடுவர்களும் அணியின் பயிற்சியாளர்களும் இரு அணியினரையும் சமாதானப்படுத்தி விளக்கி விட்டனர்.

image

இசம்பவம் குறித்து இந்திய அணியின் கேப்டன்  "பிரியம் கார்க்" கூறுகையில்: "வெற்றியும் தோல்வியும் ஆட்டத்தின் ஒரு பகுதிதான் ஆனால் வங்கதேச வீரர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானதாக இருந்தது, இவ்வாறு அவர்கள் நடந்து கொண்டிருக்க கூடாது, ஆனால் நடந்து விட்டது" என கூறினார். மேலும் இச்சம்பவம் குறித்து வருத்தமளிப்பதாக வங்கதேச கேப்டன் அக்பர் அலி தெரிவித்தார்.

இரு அணியினரும் ஆக்ரரோஷமாக மோதிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி  வருகின்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments