ஆஸ்கர் விருதுகள்..சாதனை படைத்த கொரிய படம்!!

0 1196

92 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் கொரிய திரைப்படமான "பாரசைட்" சிறந்த திரைப்படம் உட்பட நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை கொரிய படமான "பாரசைட்" வென்றது. ஆங்கிலம் அல்லாத ஒரு திரைப்படம் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை பெறுவது இதுவே முதல்முறை.image

மேலும் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பாரசைட் படத்தின் இயக்குனர் "போங் ஜூன் ஹூ" பெற்றார்.image

இதேபோல் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை உள்ளிட்ட நான்கு விருதுகளை இத்திரைப்படம் வென்றுள்ளது. உலகளவில் பல்வேரு முன்னணி நடிகர்களின் படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கொரிய படமான பாரசைட் பல பிரிவுகளில் விருதுகள் வென்றுள்ளதை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments