6 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை தொட்ட சில்லறை பணவீக்கம்

0 909

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாத சில்லறை பணவீக்கம் அதிகரித்து காணப்பட்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாத சில்லறை பணவீக்கம் 7 புள்ளி 40 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியுள்ள அவர்கள் 2014 மே மாதத்திற்குப் பிறகு இது தான் அதிகபட்ச சில்லறை பணவீக்கம் எனவும் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் பொருள்களின் மீதான விலை உயர்வு அழுத்தம் ஓரளவு குறைந்து காணப்பட்டாலும், ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையில் குறிப்பிட்டதைப் போல சில்லறை பணவீக்கம் 2 முதல் 6 சதவிகிதமாக குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாட்டில் உணவு பணவீக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதால், நுகர்வோர் விலை குறியீடும் கடந்த மாதம் உச்சத்தை நோக்கி சென்றிருக்கக்கூடும் என்று ஆசிய பொருளாதார வல்லுநர் டேரன் ஆவ் (Darren Aw)கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments