அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆலோசனை...

0 1561

திமுக வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. 

அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 56 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன், கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இன்று முதல் வரும் 13ம் தேதி வரை மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்துக்கு முன்னதாக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார்.

தொடர்ந்து காலையில் தொடங்கிய கூட்டத்தில் கரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, நாகை, திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதே போல், வரவிருக்கும் நகராட்சி மாநகராட்சி தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றுவது குறித்தும், கட்சி பலவீனமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து பலப்படுத்துவது, அரசின் திட்டங்களை சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்வது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்டங்களில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளும் கேட்டு பெறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments