புகழை எட்டுவதற்கு முன்பு பட்டறையில் படுத்து டிரில்லிங் வேலை பார்த்தேன் - தர்மேந்திரா உருக்கம்

0 1279

பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக விளங்கிய தர்மேந்திரா, மும்பையில் வீடு இல்லாமல் பட்டறையில் தூங்கிய நாட்களை நிகழ்ச்சி ஒன்றில் நினைவுகூர்ந்தார்.

200 ரூபாய் சம்பளத்துக்காக தாம் டிரில்லிங் வேலைக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். தமது சரஸ் படத்தில் மனைவி ஹேமா மாலினியுடன் பாடிய டூயட் பாடலை ரசிகர்கள் முன்னிலையில் நடித்து காட்டி உற்சாக கரவொலிகளையும் தர்மேந்திரா பெற்றார்.

யாதோன் கீ பாரத், ஷோலே போன்ற பல படங்களில் தர்மேந்திராவின் நடிப்பும் சண்டைக் காட்சிகளும் பெரும் புகழ் பெற்றவை. 84 வயதாகும் தர்மேந்திராவுக்கு மத்திய அரசு பத்மபூசன் விருது அளித்து கௌரவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments