அமெரிக்கப் பொருளாதாரத் தடையையும் மீறி அசத்தும் ஈரான்
புதிய எண்ணெய் வயல்களைக் கண்டறிவதற்கும், இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்குமான புதிய செயற்கைக்கோளுக்கான கவுண்ட் டவுனை ஈரான் தொடங்கியுள்ளது.
113 கிலோ எடை கொண்ட ஸாபர் என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக் கோளை சிர்மோர்க் ராக்கெட் மூலம் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது. இந்த செயற்கைக் கோள் மூலம் நிலத்திற்கு கீழ் இருக்கும் எண்ணெய் படிமங்களைக் கண்டுபிடிக்கவும், பூகம்பம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ராட் 500 என்ற குறுகிய தூர ஏவுகணையையும் ஈரான் சோதனை செய்துள்ளது.
200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை குறிதவறாமல் தாக்கும் வல்லமை கொண்டது இந்த ஏவுகணை என ஈரான் தெரிவித்துள்ளது.அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடையையும் மீறி ஈரான் செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணையை ஏவியுள்ளது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Comments