சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் பணம் பெற்று சிகிச்சை

0 2038

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் பத்மாவதி நிறுவன ஊழியர்கள் பணம் வாங்கி கொண்டு சிகிச்சை பார்க்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த மருத்துவமனையில்  டீன் அலுவலகம் அமைந்துள்ள வார்டுகளில் செவிலியர்கள் சரிவர பணியில் ஈடுபடாததை அடுத்து  அங்கு துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியில் பத்மாவதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்  நோயாளிகளுக்கு ஊசி போடுவது,குளுக்கோஸ் இறக்கும் பணி செய்வது உள்ளிட்டவைகளில் பணத்தை பெற்றுக் கொண்டு ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுதொடர்பாக அரசு மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments