டெல்லி சட்டமன்ற தேர்தலில் 62.59 சதவிகிதம் வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0 881

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62 புள்ளி 59 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிவுற்று 24 மணி நேரமாகியும், முழுமையான வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்படவில்லை எனக் கூறி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போர்க்கொடி உயர்த்தினார்.

இந்த சூழலில், இரவு 7 மணியளவில் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங், (Ranbir Singh) வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதராமற்றவை என்றார்.

அதிகபட்சமாக, பாலிமாரன் ((Ballimaran)) தொகுதியில் 71 புள்ளி 6 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக டெல்லி கன்டோன்மெண்ட் (Delhi Cantonment) தொகுதியில் 45 புள்ளி 4 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளதாக, டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments