நடிகை சாய் பல்லவிக்கு போர்ப்ஸ் இதழ் கெளரவம்

0 1255

தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய்பல்லவி, போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 

வெவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக்கும் டாப் இந்தியர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் அண்மையில் வெளியிட்டது. இந்த டாப் 30 இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நடிகை சாய் பல்லவி. இவர் பொழுதுபோக்கு துறை பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளார்..

இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள சாய் பல்லவி, போர்ப்ஸ் அளிக்கும் கெளரவத்தை பேருவகையுடன் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது, நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விரத பர்வம் ஆகிய தெலுங்கு படங்களில் சாய் பல்லவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments