முழு வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடாதது ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கேள்வி

0 863

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளிள் முழுமையான விவரங்களை, தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருப்பது, பெரும் அதிர்ச்சி அளிப்பதாக, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு, சனிக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மிக மந்தமாகவே வாக்குகள் பதிவான நிலையில், அதுகுறித்த முழு விபரங்களை, தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

24 மணி நேரம் கடந்த பின்னரும், முழுமையான வாக்குப்பதிவு விபரங்களை வெளியிடாதது ஏன்? என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்திருக்கும் டெல்லி பாரதிய ஜனதா கட்சி, தலைநகரில் தங்கள் ஆட்சியே அமையும் என நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments