குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா பிரம்மாண்ட பேரணி

0 1550

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, மகாராஷ்டிரா நவநிர்மான சேனா கட்சியினர், மும்பையில், பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

அண்மையில் சிஏஏ சட்டத்திருத்தம் குறித்து கருத்துத் தெரிவித்த ராஜ்தாக்ரே, அதுகுறித்த நடைமுறைகளில் மாறுபாடு இருப்பினும், அண்டை நாடுகளிலிருந்து, இந்தியாவிற்குள், சட்டவிரோதமாக ஊடுருவியிருப்போரை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரட்டியடித்தால், அதற்கு முழு ஆதரவு உண்டு என்றார். இந்நிலையில், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர், மும்பையில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

மெரைன் டிரைவ் பகுதியில் தொடங்கிய பேரணி, தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மெய்டன் மைதானப் பகுதியில் நிறைவடைந்தது.

நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளவர்களை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments