மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் ரயில்வே ஊழியர்

0 916

சென்னை திருவொற்றியூரில் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக முன்னாள் ரயில்வே ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ஒழுங்கீன புகாரால் ரயில்வே உதவியாளர் பணியில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நீக்கம் செய்யப்பட்டவன் சங்கர் ராவ்.

இவன், கடந்த அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை ஏமாற்றி சென்னை திருவொற்றியூரில் உள்ள ரயில்வே குடியிருப்புக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

அங்கு சிறுமியை தங்க வைத்து பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினத்தில் உள்ள பாட்டியை செல்போனில் தொடர்பு கொண்டு தான் சென்னையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுமி தனியாக நிற்பதைப் பார்த்த ரயில்வே போலீசார், அவரை மீட்டு பெரவள்ளூர் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர். ஏற்கனவே பேத்தியை காணவில்லை என விசாகப்பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்த பாட்டி, ஆந்திரா போலீஸ் உதவியுடன் சென்னை வந்து காப்பகத்தில் இருந்த சிறுமியை மீட்டார்.

விசாரித்ததில் சிறுமி 4 மாதம் கர்ப்பமான இருப்பதை அறித்து அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி, திருவொற்றியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ரயில்வே குடியிருப்பில் தங்கியிருந்த சங்கர் ராவை கைது செய்து போலீசார், சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments