கொரோனாவை வென்ற சீன குழந்தை !!

0 2976

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை எந்தவித வைரஸ் பாதிப்பும் இல்லாமல் பிறந்து உள்ளது.

சீனாவில் பரவி உள்ள கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சீனாவில் ஜெஜியாங் மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்ட பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்து உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் பிறந்த அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தைக்கு ஏந்த வித பாதிப்பும் இல்லையென தெரிய வந்துள்ளது. இது குறித்து சீன பத்திரிகையான சின்ஹுவா செய்தி வெளியிட்டு குழந்தை பிறந்த வீடியோவையும் வெளியிட்டு உள்ளது.

image

மேலும் இன்னும் சில தினங்களுக்கு அக்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என ஜெஜியாங் மாகாண யூனிவர்சிட்டி ஆஃப் மெடிசன் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் எந்த பாதிப்பும் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு  பலரும்  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம்  உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments