உலகின் மிகப் பழமையான திருவிழா; கண்கவர் கலைநிகழ்ச்சிகள்
மிதவை நகரம் என்று அழைக்கப்படும் இத்தாலியின் வெனிஸ் நகரில் வருடாந்திர திருவிழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரியோ டி கன்னரேஜியோ என்ற இடத்தில் தண்ணீரில் மிதக்கும் படகுகளில் விதவிதமாக உடையணிந்த கலைஞர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
பண்டைய வெனிஸ் அரண்மையில் முகமூடி நடனம், நகரின் முக்கிய இடங்கள், கால்வாய்களில் கண்கவர் அணிவகுப்பு என வெனிஸ் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு நடக்கும் உலகின் மிகப் பழமையான இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
Comments