சொகுசு கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஜப்பான் அரசு இராணுவத்தை அனுப்ப முடிவு

0 1265

கொரோனா வைரஸ் பீதியால் யோகோஹமா துறைமுக பகுதியில் 138 இந்தியர்கள் உள்ளிட்ட 3,700 பேருடன் நிறுத்தி கண்காணிக்கப்பட்டு வரும் சொகுசு கப்பலுக்கு ராணுவத்தை ஜப்பான் அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவுக்கு சென்று வந்த காரணத்தால், அக்கப்பலில் இருப்போர் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று மேலும் 2 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியானதால், கப்பலில் வைரஸ் தாக்கத்துக்கு ஆளானோர் எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அக்கப்பலுக்கு ராணுவத்தை அனுப்ப ஜப்பான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கப்பலில் மீட்பு பணிக்கு ராணுவம் அனுப்பப்படுகிறதா, நிர்வாக பணிக்கு அனுப்பப்படுகிறதா என தகவல் இல்லை. இதனிடையே, கப்பலில் இருக்கும் கர்நாடக மாநிலம் கார்வாரை சேர்ந்த 26 வயதான மாலுமி, தமது குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு,  தங்களை மீட்க மத்திய அரசிடம் உதவிகோரும்படி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments