ஒரே இடத்தில் 10,176 மாணவிகள் பரதநாட்டியம் ஆடி புதிய சாதனை

0 1655

சென்னை தாம்பரம் அருகே ஒரே இடத்தில் 10,176 மாணவிகள் பரதநாட்டியம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளனர்.

imageகௌரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் "சதிர் 10000" என்ற தலைப்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.

image வண்ணவிளக்குகளின் நடுவே மாணவிகள் அனைவரும் ஒரு சேர ஜதி சேர்ந்து, ஒரே மாதிரியான நடன அசைவுகளை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

நிகழ்ச்சியை பார்வையிட்ட கின்னஸ் நடுவர் சோபியா, இந்த முயற்சியை புதிய கின்னஸ் சாதனையாக அறிவித்து அதற்கான சான்றிதழ்களை வழங்கினார். ஏற்கெனவே, சிதம்பரத்தில் 7 ஆயிரத்து 190 பேர் கலந்து கொண்டு ஒரே இடத்தில் பரதநாட்டியம் நடத்திய சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.





SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments