ஆண்டின் முதல் லோக் அதாலத்தில் தமிழகத்தில் 50,266 வழக்குகளுக்கு தீர்வு

0 789

தமிழகம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத்தில் 50 ஆயிரத்து 266 வழக்குகளில் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, நடப்பாண்டில் பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் இரண்டாவது சனிக்கிழமைகளில், தேசிய லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

image

அதன்படி தமிழகத்தில், சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, உட்பட அனைத்து மாவட்டங்களிலும் 521 அமர்வுகள் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டன. இதன் முடிவில் சுமார் 398 கோடி ரூபாய் மதிப்பிலான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக லோக் அதாலத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments