கொச்சியில் நடைபெற்ற 22வது கடல் சார் உணவுகள் கண்காட்சி
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் 22வது கடல் சார் உணவுகள் கண்காட்சிக்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த 7ம் தேதி இதனை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் பேசிய கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்சிக்குட்டி அம்மா கடல்சார் உணவுகள் ஏற்றுமதி மூலம் பொருளாதாரம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதாக தெரிவித்தார்.
இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான மீன் உணவுகள், இறால், நண்டு போன்றவை விதவிதமாக காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு ஏற்றுமதிக்கான நிறுவனங்களின் பிரதிநிதிகளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதன் ருசி கண்டு களித்தனர்.
Comments