வழக்கத்தை விட நிலவு பெரிதாகத் தோன்றும் சூப்பர் மூன் நிகழ்வு
சூப்பர் மூன் எனப்படும் பெரிய அளவிலான நிலவு நேற்று உலகின் பல பகுதிகளில் பார்க்கப்பட்டது.
நடப்பாண்டின் முதல் பெரிய முழுநிலவு நேற்று தெரிந்தது. உலகின் பல பகுதிகளில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் இன்று வரை இந்த சூப்பர் மூன் நிகழ்வைப் பார்க்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமி தனது நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போது நிலவுக்கு நெருக்கமாகச் செல்லும்போது, நிலவின் பரப்பும், வெளிச்சமும் அதிக அளவில் நமது கண்களுக்குப் புலப்படும் இதுவே சூப்பர் மூன் என்ற நிகழ்வாகக் கூறப்படுகிறது. நீள்வட்டப் பாதையில் நிலவு தூரமாகத் புலப்படும் போது அபோஜி என்றும் பெரியதாகத் தெரியும் போது பெரிஜி என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டு அழைக்கின்றனர். சென்னையில் இத்தகைய சூப்பர் மூன் நிகழ்வு இன்று அதிகாலை ஒரு மணி 3 நிமிடங்கள் முதல் 2 மணி 33 நிமிடங்கள் வரை தெரிந்தது.
Comments