60 யானைகளை வேட்டையாட அரசு அனுமதி...?

0 1377

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் 60 யானைகளைக் கொல்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

உலகிலேயே அதிக யானைகள் இருப்பதால், அங்கு யானை, மனித மோதல் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. நீர் மற்றும் உணவு தேடி வரும் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து விடுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் யானைகளை வேட்டையாடுவதற்கு கடந்த 5 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அதிபர் சமீபத்தில் நீக்கினார். இதையடுத்து மனிதர்களுக்கு அதிக அளவில் இடையூறு ஏற்படுத்தும் 60 யானைகளைக் கொல்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

இதற்காக 6 தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உரிமமும் இந்திய மதிப்பில் ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. போட்ஸ்வானா அரசின் முடிவுக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments