ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெல்லுமா?

0 1649

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.

தென்னாப்பிரிக்காவின் பாசஸ்ட்ரூம் நகரில் (Potchefstroom)  நடந்து வரும் இப்போட்டியில் அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவும், நியூஸிலாந்தை வென்று வங்கதேசமும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. ஏற்கனவே 4 முறை சாம்பியனான இந்தியா, தற்போது 5-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள உற்சாகத்துடன் வங்கதேசம் களம் காண்கிறது. போட்டி இன்று பிற்பகல் ஒன்றரை மணி அளவில் தொடங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments