கர்த்தார்புர் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லாத நிலை உருவாகுமா?

0 699

சீக்கியர் புனித்தலமான கர்த்தார்புருக்கு விசா தேவைப்படாத வகையில் பாதையை திறந்த பாகிஸ்தான் , தற்போது பாஸ்போர்ட்டும் தேவையில்லை என்ற நிலையை அறிவிக்க உள்ளது .

நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் லிஜாஸ் ஷா தற்போதைய நடைமுறையின்படி பக்தர்கள் காலை முதல் இரவு வரை இந்திய பாஸ்போர்ட் அல்லது இந்திய வம்சாவளியினரின் அடையாள அட்டை போன்றவற்றை காட்டி கர்த்தார்புருக்கு செல்லலாம் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு உடல் ரீதியாக பரிசோதனை மின்னணு பரிசோதனைகள் கண்காணிப்பு கேமரா கண்காணிப்பு போன்றவற்றை செயல்படுத்தி வருவதையும் அவர் தெரிவித்தார்.

இந்தியா -பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் புரிந்துணர்வின் அடிப்படையில் பாஸ்போர்ட் இல்லாமல் கர்த்தார்புர் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது என்று கூறிய பாகிஸ்தான் அமைச்சர், பாஸ்போர்ட் இல்லாமலும் அனுமதிப்பதற்கான பரிந்துரைகள் குறித்து வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments