அமெரிக்காவில் இன்று வழங்கப்படுகிறது ஆஸ்கர் விருதுகள்

0 1194

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92வது ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா  இன்றிரவு நடைபெறுகிறது. 

நடிகர்களில் பிராட் பிட் மற்றும் ஜாக்குயின் பீனிக்ஸ் ஆகிய இரண்டு பேரில் ஒருவருக்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகைகளில் பலத்த போட்டி நிலவுகிறது. 

image

ஜூடி படத்தில் நடித்த ரெனி ஜெஸல்வேகர்( rene zellweger ) பலமான போட்டியாளராக முன்னணியில் உள்ளார். ஏற்கனவே பாப்டா, கோல்டன் குளோப் விருதுகளை அவர் வென்றிருப்பதால் அதை பின்பற்றி ஆஸ்கர் வெல்லவும் அவருக்கு வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.

image

ஆயினும் ஹாரியத் படத்தில் நடித்த கருப்பழகி சிந்தியா எரிவோ( cynthia arivo, மேரேஜ் ஸ்டோரி படத்தில் நடித்த ஸ்கார்லட் ஜோகன்சன் (scarlett johanssan ) என்ற ஹாலிவுட் நடிகை, பாம்ப் ஷெல் படத்தில் நடித்த சார்லிஸ் தெரான் (charlize theron ), லிட்டில் உமன் படத்தில் நடித்த சாவோயர்ஸ் ரோனன் ( (saoirse ronan )ஆகிய நடிகைகளும் சிறந்த நடிகைக்கான போட்டியில் இறுதிச் சுற்றில் இடம் பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments