போலீஸ் வேண்டாம் பஞ்சாயத்துக்கு வா..! தர்பார் செய்யும் டி.ஆர்..

0 1665

ஏ.ஆர். முருகதாஸ் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டு, சங்கத்தின் மூலம் பேச்சு நடத்தவர வேண்டும் என்றும் இல்லையேல் அடுத்த பட வெளியீட்டின் போது பார்த்துக் கொள்வோம் என்று வினியோகஸ்தர் சங்க தலைவர் டி.ராஜேந்தரும், செயலாளர் மன்னனும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தர்பார் படம் நஷ்டம் என கூறி ஏ.ஆர். முருகதாஸ் வீட்டிற்கு சென்று மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத 25 நபர்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விநியோகஸ்தர்களுக்கு ஆர்.கே செல்வமணி கண்டனம் தெரிவித்தார்

இதையடுத்து சென்னை - செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தரும் செயலாளர் மன்னனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து ஏ.ஆர்.முருகதாசையும், நடிகர் ரஜினிகாந்தையும் மறைமுகமாக விமர்சித்தனர்..!

ஒரு கட்டத்தில் போலீஸ் நிலையம் போனா பயந்து விடுவோமா என்று மிரட்டிய டி.ராஜேந்தரும் , மன்னனும் அடுத்த படம் எடுத்தா எங்களிடம் தானே வர வேண்டும் என்றும் எச்சரித்தனர் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் தங்கள் சங்கத்தின் பலத்தை காட்ட போவதாகவும் மிரட்டினர்

வருமானவரித்துறை சோதனையின் அதிர்வுகளால் கடைசிவரை நஷ்டம் எவ்வளவு தொகை என்பதை சொல்ல மறுத்த டி.ஆர், அதை ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கடிந்து கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments