பலி கொள்ளும் கொரோனா...இது வரை 813 பேர் உயிரிழப்பு

0 2226

உலகம் முழுவம் கொரோனா வைரசால் 813 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,198  கடந்துள்ளதால் சீன அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் தற்போது 28 நாடுகளில் தனது கோரமுகத்தைக் காட்டி வருகிறது. நாளுக்கு நாள் அந்த கிருமியால் தாக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று அதிகாலை நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 37 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இவர்களில் 6 ஆயிரத்து 106 பேர் அபாய கட்டத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சீனாவின் ஊகான் நகரில் தங்கியிருந்த அமெரிக்கர் ஒருவர் கொரானா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் சீனாவில் தங்கியிருந்து உயிரிழந்த முதல் வெளிநாட்டு நபர் இவர் என்று கூறப்படுகிறது.

இதனிடையே சீனாவில் நாள்தோறும் உயிரிழப்பு அதிகரித்து வருவது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவின் பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டிருப்பதோடு, உலக பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும், கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கிறது.

சீனாவில் உள்ள தங்களது கார் உற்பத்தி ஆலைகளை தற்காலிகமாக மூடுவதாக, 7 நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்தும், அதற்கு சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிந்து கொள்ள சர்வதேச விசாரணைக் குழுவை அனுப்ப உலக சுகாதார மையம் திட்டமிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments