குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, பொய்யான தகவல்களை சொல்லி கலவரத்தை தூண்டுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யார் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றார். இஸ்லாமிய தலைவர்கள் தயார் என்றால் சி.ஏ.ஏ. குறித்து விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த தயாராக இருப்பதாகத் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததார்.
Comments