இரண்டாவது நாளாக விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்று வரும் ”மாஸ்டர்” படப்பிடிப்பில் நடிகர் விஜயைக் காணக் குவிந்த அவரது ரசிகர்கள் மீது இரண்டாவது நாளாக தடியடி நடத்தப்பட்டது.
நெய்வேலி 2ஆவது நிலக்கரி சுரங்கத்தில் மாஸ்டர் பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் வெள்ளிக்கிழமை குவிந்த விஜய் ரசிகர்கள் மீது சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிகிழமையும் படப்பிடிப்பு நடைபெறும் சுரங்க வாயில் முன் குவிந்த ரசிகர்கள், ஆர்வ மிகுதியில் அங்கிருந்த இரும்பு கேட் மீது ஏற முயன்றனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
Comments