வாய்க்குள் முடி வளரும் பெண் !! அதிர்ச்சியில் டாக்டர்கள் !!
PCOS (Polycystic ovary syndrome) எனப்படும் சினைப்பை பாதிக்கும் நோயினால் பல்வேறு இன்னல்களை பெண்கள் சந்திக்கின்றனர். ஆண் ஹார்மோன்களை அதிகரிக்கும் ஆண்ட்ரோஜென் எனப்படும் சுரப்பி அளவுக்கு அதிகமாக பெண்களின் உடலில் சுரப்பதன் மூலம் இந்நோய் வருகிறது.
ஒழுங்கற்ற மாதவிவிடாய், உளவியல் சார்ந்த பிரச்சனைகள் , உடல்பருமன் போன்ற பல சிக்கல்களை இந்நோயினால் பெண்கள் சந்திக்கின்றனர், அதிலும் குறிப்பாக உடல் மற்றும் முகத்தில் அதிகப்படியாக முடி வளருவது தான் பெண்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது.
ஆனால் இதே நோயின் காரணமாக ஒரு பெண்ணுக்கு வாய்க்குள் கண் இமை போன்று முடி வளருவது மருத்துவர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது . இத்தாலியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு இந்த அதிசய பிரச்சனை வந்து உள்ளது. அவரை பரிசோதித்ததில் அவரின் பற்களின் ஈறுகளில் கண் இமைகளில் போன்று முடி வளருவதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
மேலும் அவரை தொடர்ந்து பரிசோதித்ததில் அந்த பெண் PCOS எனும் சினைப்பை பாதிக்கப்பட்டது தெறியவந்துள்ளது. அதன் காரணமாகவே அந்த பெண்ணுக்கு இந்நோய் வந்ததை கண்டுபிடித்து உள்ளனர்.
மேலும் இது குறித்து இத்தாலியில் உள்ள கம்பானியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடத்தியதில் இதே போன்று பத்து ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரு பெண் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதிகப்படியான டெஸ்டோஸ்ட்ரோன் உடலில் சுரப்பதன் காரணமாகவே இந்த பிரச்சனை வருவதாகவும் அதற்கு தீர்வாக குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் இந்த அறியவகை நோயை குணப்படுத்த முடியும் எனவும் அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணின் ஈறுகளில் உள்ள முடியை அகற்றி தசையின் ஒரு பகுதியை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
Comments