2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடமிருந்து பெற்ற கையெழுத்துக்களை குடியரசு தலைவரை நேரில் சந்தித்து வழங்கவுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்றுவந்த கையெழுத்து இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சி, சென்னை ஓட்டேரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய
மு.க. ஸ்டாலின், வேலைவாய்ப்பு பிரச்சனையை மூடி மறைக்கவே CAA, NPR, NRC போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒருகோடி கையெழுத்துகளை பெற இலக்கு வைத்து 2 கோடி கையெழுத்துகளை பெற்றுள்ளதாக தெரிவித்த ஸ்டாலின், இந்த கையெழுத்து இயக்கத்தை விமர்சித்து பேசுபவர்களுக்கும் சேர்த்தே தாங்கள் போராடிவருவதாக தெரிவித்தார்.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரின் போதாவது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Comments