மணிரத்னத்திற்கும் அட்லியின் நோய்..! ராமராஜன் படத்தை காப்பி அடித்தாரா..?
மணிரத்னம் கதை வசனத்தில் வெளியாகி உள்ள வானம் கொட்டட்டும் படத்தின் மூலக்கதை ராமராஜன் நடிப்பில் வெளியான தங்கமானராசா படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கரகாட்டக்காரன் படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து ராமராஜன்- கனகா நடிப்பில் 1989 ல் வெளியாகி ஹிட் அடித்த படம் தங்கமான ராசா..!
கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போன தந்தையை பல ஆண்டுகள் கழித்து ஜெயிலில் இருந்து வந்த பின்னரும் பழிக்குப்பழி வாங்க துடிக்கும் கிராமத்து பங்காளிகளின் பகைமை உணர்ச்சி தான் படத்தின் மூலக்கதை...!
இதே கதை நகரத்தின் பின்னணியில் நகர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை மணிரத்னம் தனது பாணியில் விவரித்தால் அது, வானம் கொட்டட்டும் படம் ...! என்கின்றனர் படத்தை பார்த்த விமர்சகர்கள்
மணிரத்தினத்தின் மவுனராகம், சத்ரியன் கதையின் சாயலில் ராஜாராணி, தெறி போன்ற படங்களை எடுத்து காப்பி கதை சர்ச்சையில் சிக்கியவர் இயக்குனர் அட்லி .!
ஒரு கட்டத்தில் ஒரு படத்தின் காட்சிகளை காப்பி அடிப்பதை தவிர்த்து பல பட காட்சிகளை கலந்து காக்டெய்லாக வழங்கியதால் அட்லி எங்கிருந்து சுட்டார் என்பது தெரியாமல் குழம்பி யாரும் சொந்தம் கொண்டாட இயலாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அட்லியின் கதை தழுவும் நோய் மணிரத்னத்துக்கும் பரவி, ராமராஜனின் தங்கமான ராசா படத்தின் கதையை தழுவினாரா? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இன்னும் ஒருபடி மேலே போய், மணிரத்னத்திற்கு இன்று தோன்றிய இதே கதை 31வருடங்களுக்கு முன்பே தங்கமான ராசா படத்தின் இயக்குனர் வி.அழகப்பனுக்கும் தோன்றி இருக்கும் போல.... நமக்கு ஏன் வம்பு ... என்றும் கலாய்த்து வருகின்றனர் நம்ம ஊரு நெட்டிசன்கள்..!
Comments