ஒரே கல்லால் ஆன 40 அடி உயர முருகன் சிலை பிரதிஷ்டை

0 5975

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில், ஒரே கல்லால் ஆன 40 அடி உயரமுள்ள பிரமாண்ட பாலமுருகன் சிலைக்கு பிரதிஷ்டை நடைபெற்றது.

தண்டலத்தில் பாலமுருகன் ஆலயம் புதிதாக கட்டப்பட்டுவரும் நிலையில் இங்கு பிரதிஷ்டை செய்வதற்காக
மகாபலிபுரம் பாஸ்கர் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினர் கைவண்ணத்தில் சிலை உருவாக்கும் பணிகள், ஒராண்டாக நடைபெற்றது.

image

அந்த வகையில், 180 டன் எடை மற்றும் 40 அடி உயரத்தில் உருவான சிலையின் பிரதிஷ்டை பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் நடைபெற்றது.

image

ஒரே கல்லில் 40 அடி உயரத்துக்கு முருகன் சிலை உருவாகியுள்ளது இதுவே முதன்முறை எனச் சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments