டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் - இதுவரை 36 பேர் கைது

0 1072

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி அடைந்து, அரசுப் பணியில் உள்ள 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 அரசு ஊழியர்கள், 2 டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள், 2 இடைத்தரகர்கள், 9 தேர்வர்கள் மற்றும் ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் வாகன ஓட்டுநர் என 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் 15 அரசு ஊழியர்கள், 3 காவலர்கள், 1 இடைத்தரகர், ஒரு கிராம நிர்வாக அலுவலர் என 20 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments