அல்போன்சா மாம்பழத்துக்கு கிராக்கி..!

0 1999

மகராஷ்டிராவில் வரத்து குறைவு காரணமாக ஒரு டஜன் அல்போன்சா மாம்பழங்கள் 3 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.

சிந்துதுர்க் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் ருசியான அல்போன்சா மாம்பழங்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு உள்ள நிலையில் பெரும் பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் அரபிக் கடலில் உருவான சூறாவளி புயல்கள் காரணமாக மாமரங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதால் சந்தைக்கு வரும் அல்போன்சா பழங்களின் வரத்து குறைந்துள்ளது.

இதனால் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளநிலையில் 4 டஜன் மாம்பழங்களை கொண்ட பெட்டிகள் 15 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக விவசாய உற்பத்தி சந்தைக் குழு உதவி செயலாளர் சோம்குவார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments