மாநிலங்கள் ஒத்துழைத்தால் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசல் விலை - நிர்மலா சீதாராமன்
மாநிலங்கள் ஒத்துழைத்தால் பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியமைச்சர், ஜி.எஸ்.டி விவகாரத்தில் தமிழ்நாடு தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், இரண்டு தவணைகளில் நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
எல்.ஐ.சி பங்கு விற்பனை விவகாரத்தில் எத்தனை சதவீதம் விற்பனை என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார். தமிழ்நாடு மாநில அரசோடு ஆலோசித்து தான் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து அறிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சரஸ்வதி சிந்து சமவெளி என குறிப்பிட்டது குறித்து பட்ஜெட் பதிலுரையில் விளக்கம் அளிக்க உள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின், பட்ஜெட் விளக்க செய்தியாளர் சந்திப்பின்போது, அருகில் அமர்ந்திருந்த பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் தூங்கி வழிந்தார். இருமுறை, நிர்மலா சீதாராமன், சந்தேகம் கேட்பது போல் எழுப்ப முயன்ற முயற்சியும் பலனளிக்கவில்லை....
Comments