கொரோனா அச்சுறுத்தலையும் மீறி மலேசியாவில் தைப்பூசம் கோலாகலம்
கொரோனா வைரஸ் அச்சத்தையும் மீறி மலேசியா தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
மலேசியாவில் அரசு ஆதரவுடன் தைப்பூச திருவிழா 3 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இதற்கான ஏற்பாடுகளை மலேசியா அரசு செய்திருந்தது.
தமிழர்கள் வாழும் பினாங்கு உள்ளிட்ட இடங்களிலும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. நடப்பாண்டில் கொரானோ வைரஸ் அச்சுறுத்தலால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் வழக்கம் போல, ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் தைப்பூச திருநாளில் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
உலகப் புகழ் பெற்ற பத்துமலையில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோலிலிலும் வழக்கம் போல பக்தர்கள் திரண்டனர். நடப்பாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை முருகன் கோவில் சார்பாக முப்பரிமாண ரதம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
Comments