118 கி.மீ. தூரத்தை 27 மணி நேரத்தில் கடந்த இந்திய வீரர்

0 1360

அபுதாபியில் இருந்து துபாய் வரை 118 கிலோ மீட்டர் தூரத்தை 27 மணி நேரத்தில் கடந்து இந்திய வீரர் அசத்தியுள்ளார்.

30 வயது ஆகாஷ் நம்பியார் கேரளாவில் பிறந்து பெங்களூருவில் படித்து வளர்ந்தவர். மாரத்தான் ஓடுவதில் அதீத ஆர்வம் கொண்ட இவர், இலங்கையின் கொழும்புவில் இருந்து புனவதுனா நகர் வரையில் 120 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி சாதனை புரிந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி அபுதாபியில் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கிய ஆகாஷ், அடுத்த நாள் துபாயின் பட்டுடா மாலை (Battuta Mall) அடைந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 35 வயதிற்குட்பட்டவர்கள் கூட உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை என்று வேதனை தெரிவித்துள்ள ஆகாஷ் நம்பியார், அவர்கள் உடல்தகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சவாலை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments