நீதிமன்றங்களில் செல்போன் தடை ஏன்..? கேரள முன்னாள் ஆளுநர் விளக்கம்
மும்பை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை மும்பை நீதிமன்றத்திலிருந்து தொலைபேசி மூலம் பாகிஸ்தான் ஒட்டு கேட்ட விவகாரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டதாக கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த ஒத்தக்குதிரையில் தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், சென்னையில் இருந்து மேகாலயாவுக்கு மாற்றம் செய்ததால் நீதிபதி ஒருவர் ராஜினாமா செய்ததாகவும், அதேபோன்று தானும் வேறு மாநிலங்களில் பணியாற்ற மறுத்திருந்தால் விவசாயம் செய்து மாடு மேய்த்துக்கொண்டு தான் இருந்திருக்கவேண்டும் என்றும் கூறினார்.
Comments