யோஹோமா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 138 பேர் இந்தியர்கள் என தகவல்
ஜப்பானின் யோகாஹாமா (Yokohama) பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருப்போரில் 138 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவுக்கு சென்று வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது பயணிக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால்,அக்கப்பலில் இருப்போர் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
யோகாஹாமா பகுதியில் கப்பல் நிறுத்தப்பட்டு, அதிலிருக்கும் 3700 பேரும் கண்காணிக்கப்படுகின்றனர். அதிலிருப்போரில் 61 பேருக்கு கொரானா வைரஸ் உறுதியான நிலையில், மாலுமிகள் 132 பேரும், சுற்றுலா பயணிகள் 6 பேரும் இந்தியர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இருப்பினும் அவர்களுக்கு வைரஸ் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
Comments