பெண்கள் பூப்பெய்துவிட்டாலே திருமணத்திற்கான வயதை எட்டிவிட்டனர் - பாக்., நீதிமன்றம்
பெண்கள் பூப்பெய்திவிட்டாலே திருமணத்திற்கான வயதை எட்டிவிட்டதாக கருதலாம் என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கராச்சியை சேர்ந்த ஹுமா என்ற 14 வயது கிறித்தவ சிறுமியை கடந்த அக்டோபரில் கடத்திச் சென்ற அப்துல் ஜப்பார் என்பவன் கட்டாய மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாக வழக்கு பதிவானது.
சிறுமியின் பெற்றோர் தொடுத்த வழக்கை விசாரித்த சிந்து மாநில உயர் நீதிமன்றம் திருமண வயது ஆகாவிட்டாலும், சிறுமி பூப்பெய்திவிட்டதால் ஷரியா சட்டப்படி இந்த திருமணம் செல்லும் என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Comments