தளராத தன்னம்பிக்கை... வியப்பில் ஆழ்த்திய இளைஞர்

0 942

நாம் செய்யக்கூடிய எந்த செயலையும் தன்னம்பிக்கையோடு செய்யும் போது அது மிகப்பெரும் தாக்கத்தையும் மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மாறும், அப்படி ஒரு செயலை மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் செய்து காட்டியுள்ளார், இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. 

image

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்.அதில் இளைஞர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் ஹைஜம்ப் எனும் சவாலான விளையாட்டை தனது ஒரே காலால் தாண்டி உள்ளது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Every great story happened when someone decided not to give up?? pic.twitter.com/VLVGDlAbyl

— Susanta Nanda IFS (@susantananda3) February 6, 2020 ">

 

 

இது குறித்து சுசாந்த் நந்தா ''ஒருபோதும் விட்டுக்கொடுக்காத மனம் படைத்தவர்களே பெரும் சாதனைகளை நிகழ்த்துகிறார்கள்'' என ட்விட்டரில் பதிவு செய்து அந்த இளைஞரின் வீடியோவையும் பகிர்ந்து உள்ளார். இளைஞரின் இந்த முயற்சியை இணையத்தில் பலரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

சமீபத்தில் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவை அந்த இளைஞர் நினைவுப்படுத்தியுள்ளதாக பலரும் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments