ரூ.711 கோடியை 6 வாரங்களுக்குள் செலுத்த அனில் அம்பானிக்கு கெடு

0 1330

சீன வங்கிகளிடம் இருந்து 6 ஆயிரத்து 579 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாத வழக்கில், 711 கோடி ரூபாயை முதல் கட்டமாக ஆறு வாரங்களுக்குள் செலுத்துமாறு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012ல் ரிலையன்ஸ் குழுமம் , அனில் அம்பானி அளித்த உத்தரவாதத்தின் பேரில், சீனாவின் 3 வங்கிகளின் மும்பை கிளைகளில் இருந்து 4 ஆயிரத்து 836 கோடி ரூபாய் கடன் பெற்றது.

இதை வசூலிக்க இந்த வங்கிகள் தொடர்ந்த வழக்கில் தமக்கு எந்த சொத்தும் இல்லை, தம்மிடம் பணமும் இல்லை என்று அனில் அம்பானி கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

மும்பையில் ஆடம்பரகார்கள், பங்களா என்று சொகுசாக அவர் வாழ்வதாக வங்கிகள் தரப்பு கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், முகேஷ் அம்பானி உள்ளிட்ட உறவினர்களின் உதவியோடு கடனை திருப்பிச் செலுத்துமாறு அனில் அம்பானிக்கு கெடு விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments