ஆம் ஆத்மி தொண்டரை கன்னத்தில் அறைய முயன்ற காங். வேட்பாளர்
டெல்லியில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், காங்கிரஸ் வேட்பாளர் அல்க்கா லம்பா, ஆம் ஆத்மி கட்சி தொண்டரை கன்னத்தில் அறைய முயன்றதால் அங்கு பரப்பு நிலவியது.
கடந்த முறை ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, சாந்தினி சவுக் தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆக தேர்வு செய்யப்பட்ட அல்க்கா லம்பா, கெஜ்ரிவாலுடன் மோதல் போக்கு ஏற்பட்டு, கடந்த அக்டோபரில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில், டெல்லியில் ஒரு வாக்குச்சாவடி முன்பு, அல்க்கா லம்பாவுக்கும் ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னைப் பார்த்து கூச்சல்போட்ட நபரை அல்க்கா லம்பா கன்னத்தில் அறைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அந்த நபரை மீட்டு அழைத்துச் செல்ல முயன்றபோது, அல்க்கா லம்பா உள்ளிட்டோர் விடாமல் துரத்திச் சென்று வசைபாடினர். மீண்டும் ஒருமுறை அந்த நபரை கன்னத்தில் அறைய அல்க்கா லம்பா முயன்றார்.
Comments