TNPSC முறைகேடு : ஸ்டாலின் பொத்தாம்பொதுவாக குற்றச்சாட்டு - அமைச்சர் ஜெயக்குமார்

0 1498

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தால் மு.க.ஸ்டாலின் சி.பி.சி.ஐ.டி.யிடம் சொல்ல வேண்டும் என்றும், தகவல் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் சம்மன் அனுப்பி உண்மை வரவழைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ஷெனாய் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முறைகேட்டில் உள்ள உயரதிகாரிகள் யார் என்பதை ஸ்டாலின் சொல்ல வேண்டும் என்றார். ஸ்டாலின் தன் மீது குற்றச்சாட்டு கூறினால் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.

மின் வாரியத் தேர்வுகள் ஒளிவுமறைவின்றி நடைபெறுவதாகவும் தவறு நடக்க வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 90 ஆயிரம் பேர் கலந்துகொண்ட கேங்மேன் தேர்வுகள் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை நீதிமன்றத்தில் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments