நீதிபதியின் மனைவி, மகனை சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்பான நபருக்கு தூக்கு !

0 932

அரியானா மாநிலத்தில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாவலருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குருகிராமில் உள்ள ஆர்காடியா சந்தை அருகே கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண காந்த் சர்மாவின் மனைவி ரீது, மகன் துருவ் ஆகியோரை பாதுகாவலர் மகிபால் சுட்டுக் கொன்றார்.

இதுதொடர்பாக குருகிராமில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதில் மகிபாலுக்கு தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டுக்குப் பிறகு, அந்நீதிமன்றம் விதித்துள்ள முதல் தூக்குத் தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments